Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 17:16 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
"இலங்கை அகதிகள் நாடு திரும்புகிறார்கள்"
 
நாடு திரும்புகிறார்கள் இலங்கை அகதிகள்
இலங்கை அகதிகள் நாடு திரும்புவதாக ஐ நா கூறுகிறது
தமிழ்கத்தில் இருந்து இந்த வருட ஆரம்பம் முதல் இது வரை ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் இலங்கை திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (யூ என் எச் சி ஆர்) இலங்கைக்கான துணை வதிவிடப் பிரதிநிதியான ஜெனிஃபர் பக்கோனிஸ் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டைவிட இது சற்று அதிகமான எண்ணிக்கை என்று கூறியுள்ள அவர், அவ்வாறு இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தமது நிறுவனம் சில உதவிகளை வழங்கிவருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் பாதுகாப்பான நிலைமை திரும்பி விட்டது என்ற உணர்வு காரணமாகத்தான் இந்தியாவில் இருந்து அகதிகள் இலங்க திரும்பத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட யூ என் எச் சி ஆரின் பிரதிநிதி, குடும்ப காரணங்கள், தமது காணிகளை மீளப்பெற வேண்டும் என்ற கரிசனை உட்பட பல காரணங்களுக்காகவும் அகதிகள் நாடு திரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை அகதிகளுக்கான தகவல் பரிமாற்றத்தில் குறைவான கட்டணங்களைக் கொண்ட செல்லிடத் தொலைபேசி வசதிகள் பெரும் புரட்சியை செய்துள்ளதாகக் கூறும், ஜெனிஃபர் பக்கொனிஸ் அவர்கள், அவ்வாறாக தமது உறவினர்களுடன் அகதிகள் தொடர்பு கொண்டதன் காரணமாகவே அவர்கள் இலங்கையில் பாதுகாப்பான நிலைமை இருக்கிறது என்ற உணர்வைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள