Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 17:29 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
திபெத்திய எழுத்தாளருக்கு சிறை
 
சீனாவில் திபெத்தியர் போராட்டம் ஒன்று
சீனாவில் திபெத்தியர் போராட்டம் ஒன்று- ஆவணம்
தென்மேற்கு சீனாவில், திபெத்திய எழுத்தாளர் ஒருவருக்கு 4 வருட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஒரு சஞ்சிகையில் தாசி ரப்டென் என்னும் இளம் எழுத்தாளர் செய்த பணிகளுக்காக அவருக்கு இந்த தண்டணை வழங்கப்பட்டதாக திபெத்திய செயற்பாட்டுக்குழு ஒன்று கூறியுள்ளது.

திபெத்திய இனத்தவர்களுக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையில் மிகவும் கடுமையான முரண்பாடுகள் காணப்படும் பகுதியில் இருந்து இந்தச் சஞ்சிகை வெளிவருகிறது.

கிழக்குப் பனி மலை என்னும் தடை செய்யப்பட்ட வெளியீட்டில் தாசி ரப்டென் எழுதியிருந்ததாக கூறப்படுகின்றது. 2008 இல் திபெத்திய பகுதிகளில் நடந்த தொடர்ச்சியான வன்செயல் மோதல்களின் பின்னரான அரசாங்க கொள்கைகளை அவர் அதில் அலசியிருந்தார்.

இந்த சஞ்சிகையில் பணியாற்றிய வேறு மூன்று பேரும், பிரிவினையை தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டில் சிறையிடப்பட்டனர்.

திபெத் இனத்தவர்கள் பெருமளவில் வாழ்ந்துவரும் சிச்சுவான் மாகாணத்தில், அபா என்னும் மலைப்பாங்கான இந்தப் பிரதேசத்தில், இன்னமும் பதற்றம் அதிகமாக காணப்படுவதாக நாடுகடந்து வாழும் திபெத்தியர்கள் கூறுகிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திபெத்திய தலைநகரான லாசாவில், வெடித்த சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து, எதிர்ப்பியக்காரர்களை அடக்குவதற்கு சீன அரசாங்கம் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள