|
மேல்முறையீடு-நீதிமன்றம் அனுமதி
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மதுரை தினகரன் தமிழ் நாளேட்டின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில், மத்திய புலனாய்வுத்துறை,
மேல் முறையீடு செய்வதை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஏற்றுக்கொண்டுள்ளது.
2007ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி தினகரன் நாளிதழில் திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரிக்கு மிகக் குறைவான ஆதரவு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்தே சன் குழுமத்தைச் சேர்ந்த தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திமுக தொண்டர் அணி அமைப்பாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர், மற்றும், ஊமச்சிக்குளம் துணை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ராஜாராம் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை அமர்வு நீதிமன்றம் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஆனால், இதனை எதிர்த்து சி.பி.ஐ. உடனடியாக மேல் முறையீடு செய்யவில்லை. 118 நாள் தாமதத்திற்குப் பிறகு தான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. காலதாமதமானதற்கான பல்வேறு விளக்கங்கள் பின்னர் ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற விசாரணை இனி எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||