|
ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரிட்டனில் அண்மைய காலமாக ஒரு சில ஒருபால் உறவுக்காரர்கள் இடையில் நிக்காஹ்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.
ஒருபால் உறவு என்பது கிட்டத்தட்ட முஸ்லிம் உலகம் முழுக்கவுமே முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது - அறவே இடமில்லை என்ற ஒரு விவகாரமே இருந்துவருகிறது. பிரிட்டனை எடுத்துக்கொண்டால், மற்ற சமூகங்களில் உள்ள ஒருபால் உறவுக்காரர்கள், சம உரிமைகளைப் பெறுவதில் கணிசமான தூரம் பயணித்துள்ளார்கள் என்றாலும், பிரிட்டிஷ் முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருபால் உறவுக்காரர்களோ பெரும்பாலும் தங்களது சுய அடையாளத்தைக்கூட வெளிப்படுத்தாமல் இருந்துவருகின்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது. சமூகத்தால் ஒதுக்கப்படுவோமோ, இழிவுபடுத்தப்படுவோமோ, தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவோமோ என்ற அச்சம் காரணமாகவே ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் தம்முடைய பாலியல் நாட்டத்தை வெளியில் சொல்லாமல் மூடிவைத்திருக்கின்றனர். ஆனால் தாம் உறவுக்காரர்கள் என்று வெளிப்படையாக அறிவிக்கின்ற முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வேறு விதமான அழுத்தங்களை எதிர்கொள்கிறர்கள். பிரிட்டனில் நாஸ் என்ற அரசு சார தொண்டு நிறுவனம் தெற்காசிய பூர்வீகம் கொண்ட பிரிட்டிஷ் ஒருபால் உறவுக்காரர்களுக்கு உதவிவருகிறது. தமது அமைப்பின் உதவியை நாடுவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காகிவிட்டது என்று நாஸ் அமைப்பைச் சேர்ந்த ஆஸிஃப் குரெய்ஷி கூறினார். ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் நிக்காஹ் - திருமண உடன்படிக்கை செய்துகொண்டு தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். ஒரு சில இமாம்களும் இதற்கு உடன்படும் ஒரு நிலை ஆரம்பித்துள்ளது. பெருமளவில் வெளியில்வராமல் இருந்துவிடுகிறார்கள் என்றாலும்கூட, ஒருபால் உறவுக்கார முஸ்லிம்ககளிடையில் இஸ்லாமிய முறையில் திருமணம் நடக்கிறது என்றால், இஸ்லாத்தையும் ஒருபால் உறவுக்காரர்களின் பாலியல் தெரிவையும் ஒத்துப்போகவைக்க இந்த இமாம்கள் ஏதோ ஒருவககையில் பங்காற்றுகின்றனர் என்பது விளங்குகிறது. |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||