Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜனவரி, 2010 - பிரசுர நேரம் 12:07 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
'அகதிகள் உடைமைகள் கொள்ளை'
 
இலங்கை அகதி
இலங்கையில் இறுதிச் சமர்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொதுமக்கள் விட்டுவிட்டு வந்த உடைமைகள் தற்போது கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்குக் காரணமானவர்கள் இராணுவத்தினரே என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து தமக்கு பலரும் முறையிட்டதைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை மீது உரையாற்றியபோது, இதுபற்றி எடுத்துக் கூறியிருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தமிழாசையிடம் தெரிவித்தார்.

போர்ப் பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட உடைமைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் விபரங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் அந்தப் பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு வாய்ப்பு கிடையாது என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள