|
செய்தியறிக்கை
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிலிப்பைன்ஸில் கடத்திக் கொல்லப்பட்டோர் சடலங்கள் கண்டெடுப்பு பிலிப்பைன்ஸின் தென்பகுதித் தீவான மிண்டனோவாவில், ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களை அங்குள்ள படையினர் மீட்டுள்ளனர். அவற்றில் சில சடலங்களில் அவயவங்கள் சிதைக்கப்பட்டிருந்தன. மகுந்தனாவோ மாகாணத்தில் உள்ள அரசியல் குடும்பங்களுக்கு இடையிலான சாதிச்சண்டையாக இது இருக்கலாம் என்று அந்த இடந்தில் இருந்த ஒரு பேச்சாளர் கூறுகிறார். அடுத்த வருடம் நடக்கவிருந்த ஆளுநருக்கான தேர்தலில், தனது கணவரின் வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருந்த ஒரு பெண்ணும் அதில் கொல்லப்பட்டுள்ளார். அவரது ஏனைய குடும்பத்தினரும், சட்டத்தரணிகளும், செய்தியயாளர்களும் கூட கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளை கொடூரமானவை என்று வர்ணித்திருக்கின்ற பிலிப்பைன்ஸ் அரசாங்கம், இதனால், தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், உரிய நீதி
வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஆப்கானிய அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அமைச்சர்களில் குறைந்தது இரண்டு பேர் மீதான ஊழல் புகார்கள் மீது புலனாய்வு செய்யப்படுவதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிபிசியிடம் பேசிய அரசின் துணைப் பொது வழக்கறிஞர், இவர்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார். அதேசமயம் முன்னாள் அமைச்சர்கள் 15 பேரின் ஊழல் தொடர்பிலான புகார்களும் விசாரிக்கப்பட்ட்டுவருவதாகவும் அவர் கூறினார். இதில் சந்தேகிக்கப்படுபவர்களில் சிலர் தாங்களாகவே முன்வந்து விசாரணைகளில் பங்கேற்றிருப்பதாகவும், வெளிநாட்டில் இருப்பவர்களை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுவருவதற்கு, சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இரண்டாவது முறையாக அதிபர் பதவியேற்ற ஹமித் கர்சாய் அவர்கள், தம் நாட்டில் நிலவுவதாக அவர் கூறிய "குற்றவாளிகள் தவறுக்கு தண்டனை
அனுபவிப்பதில்லை" என்ற கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர தாம் பாடுபடப்போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குர்த் இனத்தாருக்கு கூடுதல் இடங்கள் வழங்க இராக் நாடாளுமன்றம் சம்மதம்
இராக்குக்கு வெளியில் வாழும் மில்லியன் கணக்கான இராக்கியர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவதற்கு இந்த மாற்றங்கள் பரிந்துரை செய்திருந்தன. இந்த மாற்றங்களை இராக்கின் துணை அதிபரும் சுன்னி பிரிவைச் சேர்ந்தவருமான தாரிக் அல் ஹஷிமி அவர்கள் கொண்டுவந்திருந்தார். இந்தச் சட்டம் அடுத்ததாக இராக்கிய அதிபர் சபைக்கு மீண்டும் ஒப்புதலுக்காக செல்லும். அங்கே அல் ஹஷிமி அவர்கள் மீண்டும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்கால நாடாளுமன்றத்தில் குர்து இனத்தவருக்கு கூடுதல் இடங்களை அளிக்க வகைசெய்யும் மற்ற சட்டத் திருத்தங்களுக்கு இராக்கிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் எதிர்கால நாடாளுமன்றத்தில் தங்களுக்கு உரியபிரதிநிதித்துவம் கிடைக்காதோ என்கிற சுன்னி பிரிவினர் பயத்தை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதன் விளைவாக இராக்கின் தேர்தல் சட்டங்கள் தொடர்பான முறுகல் நிலை நீடிக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். லண்டனில் பொலிசாரால் தவறுதலாகக் கொல்லப்பட்ட பிரேசில் இளைஞரின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு பெற உடன்படிக்கை
இந்த விடயம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அந்த சம்பவத்தை அந்த நபரது குடும்பத்தினர் மறக்க விரும்புவதாகவும் கூட்டாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரேசிலைச் சேர்ந்த அந்நபரை தாம் தற்கொலையாளி என்று தவறாக கருதி விட்டதாகவும், அது ஒரு மோசமான தவறு என்றும் ஒப்புக்கொண்டுள்ள லண்டன் பொலிஸார், அதற்கான அனைத்துப் பொறுப்பையும் தாம் ஏற்பதாக கூறியுள்ளனர். ஒரு மரண விசாரணை அதிகாரி இந்த மரணம் சட்டவிரோதமான கொலை என்பதை நிராகரித்து விட்டதால், முன்னர் இவரது மரண விசாரணையில் இருந்த ஜூரிக்கள் அவரது மரணத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை. |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||