Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 மே, 2005 - பிரசுர நேரம் 12:01 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
சேலையில் ஆர்வம் குறைகிறது?
 
இந்தியாவில் இளைய தலைமுறைப் பெண்கள் சேலையைவிட நவீன ஆடைகளிலேயே நாட்டம் - வர்த்தகத்துறை ஆய்வு பற்றி இந்திய, இலங்கைப் பெண்ணிய ஆர்வலர்கள் விவாதம்

இந்தியாவில் அண்மை வருடங்களில் இளைய தலைமுறைப் பெண்கள் சேலையைவிடவும் நவீன, மேற்கத்திய ஆடைகளை வாங்குவதில், அணிவதால் தான் நாட்டம், மோகம் கொண்டிருக்கிறார்கள் என்று இந்திய ஆடைவர்த்தகத் துறையில் நடத்தப்பட்ட சுற்றாய்வு கூறுகிறது.

இந்தியாவில் கால்சராய், குட்டைப்பாவாடை போன்ற நவீன ஆடைகளின் விற்பனை ஆண்டுக்கு 27 விழுக்காட்டுக்கும் மேலே அதிகமாகிறது என்று வந்திருக்கும் செய்திகள் பற்றி, தமிழ்நாட்டுப் பெண்ணிய ஆர்வலர்
காத்திருக்கும் காஞ்சிபுரம் பட்டு...
அருள்மொழியும், இலங்கை மட்டக்களப்பு விரிவுரையாளர் ரூபி பிரான்சிஸ் வாலென்றைன் ஆகியோர் தமிழோசை நடத்திய விவாதத்தில் பங்கேற்கிறார்கள்.

பெண்கள், தங்கள் முன்னேற்றத்தைக் கலாச்சாரப் பேணலுடன் பொருத்திச் செய்யும் சாத்தியங்கள் உண்டு என்ற நிலை இருக்கும்போது, சென்னை போன்ற நகர்ப்புறப் பெண்களில் இளைய தலைமுறையைப் பொறுத்தவரை, மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறார் சென்னையைச் சார்ந்த வழக்கறிஞர் அருள்மொழி.

இலங்கையைப் பொறுத்தவரை, சேலை அணிவது, ஒரு கலாச்ச்சாரச் சின்னமாகத் தொடர்ந்து கருதப்பட்டு வருகிறது, அதே வேளை சில வித
பணிசார்நது செயல்படுவதற்கு, சேலையைவிட நவீன ஆடைகள் வசதியாக இருக்கின்றன என்ற கருத்து உண்மைதான் என்கிறார் மட்டக்களப்பு விரிவுரையாளர் ரூபி.

இனி யாருக்காக...?
பெண்களைப் பொறுத்தவரை, சேலையும் சரி, நவீன ஆடைகளும் சரி, வசதி மற்றும் பணிநிமித்தம் என்றால் அது ஆரோக்கியமானது, அதே வேளை தன் உடலையும் அழகையும் வெளிக்காட்ட என்றால், அது ஆணாதிக்க, நுகர்வுக் கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து பெண்கள் மீள வில்லை என்பதையே அது காட்டுகிறது என்ற கருத்தை இருவருமே ஏற்றுக்கொண்டனர்.

இலங்கையைப் பொறுத்தவரை, போர்ச்சூழலுக்கான ஆடைகளைத் தேர்வு செய்வதில் தமிழ்ப்பெண்கள் தயங்கவில்லை என்பதை ரூபி சுட்டிக்காட்டினார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள