BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 ஏப்ரல், 2009 - பிரசுர நேரம் 10:53 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தாக்குதல் நிறுத்தம்
 
இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம
இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் தேதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் தற்காலிகமாக நிறுத்திவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து தப்பித்து வெளியேற ஒரு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கத்தில் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படும் என்று இலங்கை அரசு சார்பாகப் பேசவல்ல அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நிறுத்தம் தொடர்பில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரையில் கருத்து எதுவும் வெளியாகியிருக்கவில்லை.

இச்செய்தி குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் ஞாயிறன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள