ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுத்தமாகும் லண்டன் 'பிக் பென்' கடிகாரம் ( காணொளி)

18 ஆகஸ்ட் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:53 ஜிஎம்டி

லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ( நாடாளுமன்றம் இருக்கும் இடம்) இருக்கும் பிரசித்தி பெற்ற பிக் பென் கடிகாரம் 2010ம் ஆண்டிலிருந்து முதன் முறையாக சுத்தம் செய்யப்படுகிறது.

எலிசபத் கோபுரத்தின் மீது ஊழியர்கள், இந்த சுத்தம் செய்யும் வேலையைச் செய்ய அங்கு இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வேலை நடக்கும் போது, இந்த கடிகாரம் மணியடிக்கும், நேரம் காட்டும். ஆனால் அதன் நேரங்காட்டும் முட்கள் தற்காலிமாக வேலை நடக்கும்போது நிறுத்திவைக்கப்படும்.

இந்தக் கடிகாரத்தின் நான்கு முகங்கள் ஒவ்வொன்றும், 312 கண்ணாடித் துண்டுகளால் ஆனவை. இந்த வேலையைச் செய்ய ஐந்து நாட்கள் வரை பிடிக்கும்.