ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குரங்கு எடுத்த செல்ஃபீயால் எழுந்த சர்ச்சை

7 ஆகஸ்ட் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:57 ஜிஎம்டி

காமிரா கைத்தொலைபேசிகளை வைத்து தன்னைத்தானே புகைப்படம் எடுத்து பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிபவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

இந்த மாதிரி சுய படங்களை ஆங்கிலத்தில் செல்பீ ( selifie) என்கிறார்கள்.

நீங்கள் உங்களை எடுத்துகொண்ட செல்பீ படத்துக்கான காப்புரிமை உங்களிடம்தான் இருக்கும். ஆனால் ஒரு குரங்கு தன்னைத்தானே எடுத்துகொண்ட படத்துக்கு சொந்தம் கொண்டாட யாருக்கு உரிமை இருக்கிறது? காமிரா போனின் உரிமையாளருக்கா, குரங்குக்கா ?

இந்த விசித்திரமான வழக்கை விக்கிப்பீடியா சந்திக்கிறது.

விக்கிப்பீடியா பக்கங்களில் உள்ள அபூர்வமான கறுப்பு மக்காக் இன குரங்கு பிரிட்டிஷ் புகைப்படக்காரர் டேவிட் ஸ்லேட்டரின் காமிராவைப் பறித்து தன்னைத்தானே படமெடுத்துக்கொண்டதாம். இது இந்தோனேசியாவில் 2011ல் நடந்தது.

ஆனால் விக்கிப்பீடியாவோ, இந்தப் படத்தை குரங்குதான் எடுத்ததால், அதற்கான காப்புரிமை யாருக்கும் இல்லை, எல்லோரும் பயன்படுத்தலாம் என்கிறது. வானரம் செய்த வேலையைப் பாருங்களேன் !