நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.5 எம்பி)

ஊழல் குறித்த தகவல் தருபவர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா ?

24 ஜூலை 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:34 ஜிஎம்டி

இந்திய அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல் விவகாரங்கள் குறித்து மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு, "whistle blowers" என்றறியப்படும், துறைகளில் இருந்துகொண்டே தகவல் தருபவர்களுக்கு எழும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முன்பே சில நடவடிக்கைகளை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக மாநில அரசுகளின் துறைகளும் துறைவாரியான “ ஒருங்கிணைப்பு அலுவலர்கள்” என்ற அலுவலர்கள் பதவிகளை உருவாக்கியிருப்பதாகவும், அவர்கள் இது போன்ற தகவல்கள் தருபவர்களுக்கு எழும் மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று மத்திய பணியாளர் நல இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த ஏற்பாடுகள் திருப்தியானவையாக இருக்கின்றதா, இவை இது போன்ற தகவல்களை வெளிக்கொண்டுவருவோருக்குப் போதிய பாதுகாப்பை உறுதி செய்யுமா என்பது குறித்து , முன்பு தமிழ்நாட்டின் லஞ்ச ஊழல் தடுப்பு காவல்துறைப் பிரிவில் நடந்த சில விவகாரங்களை வெளிக்கொண்டு வந்த ஆர்வலர் மற்றும் ஊடகவியலாளர், சவுக்கு சங்கர் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்கள்