ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புனித யாத்திரைகளால் உருவாகும் பெரும் அபாயம் - காணொளி

27 ஜூன் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 12:48 ஜிஎம்டி

யாத்திரைகளும், மக்கள் பெருமளவில் ஓரிடத்தில் கூடுதலும் உலகெங்கும் உள்ள கலாச்சாரங்களில் ஒரு முக்கிய பங்காகும்.

ஆனால், இதனால், வெளியே தெரியாத ஒரு பெரிய ஆபத்தும் இருப்பதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

அளவுக்கு அதிகமான மக்கள் ஓரிடத்தில் கூடி, அதனால், உள்ளூரில் இருக்கும் உட்கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் போது, ''ஆன்டி பயோட்டிக்'' எனப்படும் நுண்ணுயிர் கிருமிகளுக்கு எதிரான மருந்துகள் பயனற்றுப் போகும் தன்மை அங்கு கூடுகின்ற மக்கள் மத்தியில் பரவி, அதனை அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லும் நிலை உருவாகிறது.

கங்கை ஆறு ஓடுகின்ற இந்தியாவின் ரிஷிகேசத்தில் இருந்து பிபிசியின் துஷார் பானர்ஜி இவை குறித்து மேலும் தகவல்களை தருகிறார்.

அவர் அனுப்பிய காணொளி.