ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராக்கில் அடுத்தது என்ன? - முடிவு செய்யத் தயங்கும் அமெரிக்கா - காணொளி

19 ஜூன் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:18 ஜிஎம்டி

இராக்கின் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஐசிஸ் போராளிகள் தமது கறுப்பு கொடியை பறக்கவிட்டுள்ளதாக வரும் செய்திகளுக்கு மத்தியில் தாம் அந்த நிலையத்தை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இராக்கிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, இராக்கில் உள்ள அரசியல்வாதிகள் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக ஒன்றாக இணைய வேண்டும் என்று அமெரிக்கா கேட்டிருக்கிறது.

அமெரிக்கா தனது வான் படை உதவியை வழங்க வேண்டும் என்று இராக்கிய அரசாங்கம் கேட்டிருக்கும் நிலையில், அந்த நெருக்கடிகளுக்கான பதில் நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் ஆராய்ந்து வருகிறார்.

இவை குறித்த பிபிசியின் நிக் சைல்ட்ஸ் அவர்களின் காணொளி.