BBC navigation

இரான் புழுதிப் புயல் - வீடியோ

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 ஜூன், 2014 - 12:26 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இரானியத் தலைநகர் டெஹ்ரானைத் தாக்கிய புழுதிப் புயலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். சுமார் 30 பேர்வரை காயம். ( வீடியோ)

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இரான் புழுதிப் புயல் - வீடியோ

00:01:05

இரானியத் தலைநகர் டெஹ்ரானில் இன்று தாக்கிய புழுதிப் புயல் குறைந்தது ஐந்து பேரைப் பலி வாங்கியுள்ளது.

மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் டெஹ்ரான் மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் நுழைந்து வீசிய இந்தப் புழுதிக் காற்றில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

இந்த புழுதிப் புயலுடன் கடும் மழையும் மின்னலும் சேர்ந்து தாக்கின. புழுதியும், கணலும் ஒரு சுவர் அளவுக்கு உயர்ந்து எழுந்து டெஹ்ரானைச் சூழ்ந்தது. இதனையடுத்து டெஹ்ரானில் மின் தடை ஏற்பட்டு நகரெங்கிலும் இருள் சூழ்ந்தது.

வானத்தை ஆரஞ்சு நிறமாக்கிய இந்தப் புழுதிப் புயல் , ஜன்னல்களையும் உடைத்து, துகள்களை சிதறடித்தது.

சில மரங்கள் விழுந்ததாலும், சிதறடிக்கப்பட்ட துகள்களாலும், மக்கள் சிலர் காயமடைந்தனர்.

கடைக்காரர்கள் பலர் கடைகளின் கதவுகளை மூடி, சேதத்தைக் குறைத்துக்கொண்டனர்.

பல கார்களும் சேதமடைந்தன.

டெஹ்ரான் விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. ஆனால் புயலின் வேகம் குறைந்த பின்னர் விமானச் சேவைகள் இயல்பு நிலைக்கு வந்தன.

இந்தப் புழுதிப் புயல் ஏற்படும் என்று முன்கூட்டியே சொல்லாததற்காக, வானிலை முன்னறிவிப்புத் துறை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.