நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.1 எம்பி)

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

21 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:30 ஜிஎம்டி

இந்தியாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2009ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தது.

பல தமிழ் தேசிய அமைப்புகள், ஈழ ஆதரவு அமைப்புகள் மிகத் தீவிரமாக இது குறித்த பிரச்சாரங்களை முன்வைத்தனர்.

காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள்கூட நிறுத்தப்பட்டனர்.

அந்தத் தேர்தல் முடிவுகளில் இலங்கைப் பிரச்சனை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்துவருகிறது.

ஐந்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது மற்றொரு நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா சந்திக்கிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனை வாக்குகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறதா? வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள்? நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என் மக்கள் முடிவுசெய்ய வழிகோலுகிற தேர்தல் விவகாரமாக இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளதா?

சென்னை செய்தியாளர் முரளீதரன் வழங்கும் தேர்தல் சிறப்பு பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.