ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராணுவத்தில் கற்றது சாதாரண வாழ்க்கைக்கு உதவுமா? - காணொளி

15 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 12:32 ஜிஎம்டி

ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் இந்த வருட இறுதியுடன் முடிவுக்கு வருகின்றன.

அங்குள்ள பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆண் மற்றும் பெண் சிப்பாய்கள் ஊருக்கு திரும்பவுள்ளனர்.

அத்துடன் அவர்களில் பலர் சிவிலியன் வாழ்க்கைக்கு மாறவுள்ளனர்.

உண்மையில், இராணுவப் பின்னணியுடன் 20 லட்சம் பேர் பிரிட்டனில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வருடாந்தம் இருபதினாயிரம் பேர் இராணுவத்தில் இருந்து விலகுகிறார்கள்.

ஆகவே, அவர்கள் இராணுவத்தில் இருந்து விலகி வரும்போது, அவர்களுக்கு எவ்வாறான வேலை வாய்ப்புக்கள் இங்கு இருக்கின்றன, என்பது இங்கு ஒரு பெரும் கேள்வியாக உள்ளது.

அண்மைய ஆய்வுகளின்படி, இராணுவத்தில் அவர்கள் பெற்ற பயிற்சிகளும், அனுபவமும், வணிக உலகுக்கு மிகவும் பொருத்தமான ஒரு மனிதராக அவர்களைத் திகழச் செய்யும் என்றும், குறிப்பாக தொழில்முனைவோராகத் திகழ அவர்களிடன் அதிக தகமைகள் இருக்கும் என்றும் கூறுகின்றன.

இவை குறித்து ஆராயும் எம்மா சாண்ட்ரா அவர்களின் காணொளி.