ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நைஜீரிய குண்டு வெடிப்பில் 70 க்கும் அதிகமானோர் பலி - காணொளி

14 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:57 ஜிஎம்டி

நைஜீரியத் தலைநகர் அபுஜாவின் புறநகர் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நியான்யா பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதிய நேரத்தில் இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 120 க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்தை சென்று பார்வையிட்ட நைஜிரிய அதிபர் குட்லக் ஜோனாத்தான் தாக்குதல் சம்பவத்திற்கு இஸ்லாமிய ஆயுதக்குழுவான போக்கோ ஹாராம் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் தாக்குதல் சம்பவத்திற்கு இது வரையில் ஒருவரும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கு முன்னர் அபுஜாவில் போக்கோ ஹாரம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அவை குறித்த ஒலிக் குறிப்பற்ற காணொளி.