நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.4 எம்பி)

மலேரியா தடுப்பில் இலங்கை முன்னேற்றம்

4 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:21 ஜிஎம்டி

மலேரியா தடுப்பில் இலங்கை முன்னேற்றம்
மலேரியா தடுப்பில் இலங்கை முன்னேற்றம்

மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

2000 ஆம் ஆண்டில் இலங்கையில் இரண்டு லட்சத்து மூவாயிரம் பேருக்கு மலேரியா நோய் தொற்றியதாக பதிவானதை அடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பரில் அந்த நிலை குறைந்து, அங்கு எவருக்கும் மலேரியா நோய் தொற்றவில்லை என்று அது கூறியுள்ளது.

அதேவேளை டிங்கு நோய் உலக மட்டத்தில் கடந்த 50 வருடங்களில் 30 மடங்கால் அதிகரித்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

நுளம்புகள் (கொசு) போன்றவற்றால் கடத்தப்பட்டு பரவும் நோய்களான சிக்கின்குனியா, மலேரியா, டிங்கு, மூளைக்காய்ச்சல், ஆனைக்கால் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறும் உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளைக் கேட்டுள்ளது.

டாக்டர் எம். ஐ. பரீட் அஹ்மட் செவ்வி

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூரில் காணப்படும் மலேரியா நோய் எவருக்கும் தொற்றவ்சில்லை என்று கூறும், மலேரியா தடுப்பு நடவடிக்கையில் பல்லாண்டுகளாக ஈடுபட்ட மருத்துவ நிபுணரான டாக்டர் எம். ஐ. பரீட் அஹ்மட் அவர்கள், மலேரியா ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற நிலையை நோக்கில் இலங்கை சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் எம். ஐ. பரீட் அஹ்மட் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இங்கு கேட்கலாம்.