BBC navigation

"தமிழகத்தில் விற்கப்படும் நவீன கருவிகளில் தமிழ் வசதி கட்டாயமாக்கப்பட வேண்டும்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 மார்ச், 2014 - 16:14 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

தமிழ் இணையப் பல்கலைக்கழக கருத்தரங்கில் தமிழக அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தினுடைய இந்தியக் கிளையின் தலைவர் மணி மணிவண்ணன் தெரிவிக்கும் கருத்துகள்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்துவைத்திருக்க வேண்டும் என இக்கருவிகளையும் மென்பொருட்களையும் உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிபந்தனையிட்டு சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட வசதி செய்துதரும் ஒரு கைத்தொலைபேசி செயலி

தமிழ் உள்ளிட வசதி செய்துதரும் ஒரு கைத்தொலைபேசி செயலி

அவ்விதமாக மாநில அரசாங்கம் சட்டம் கொண்டுவந்தால்தான், தமிழ் எழுத்துருக்களும், தமிழ் உள்ளீடு முறைகளும் அனைத்து நவீன கருவிகளிலும் இடம்பெறுகின்ற சூழ்நிலை உருவாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூர் அரசாங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே தமது நூலகங்களில் உள்ள அனைத்து கருவிகளிலும் தமிழும் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததால்தான், ஆப்பிள் நிறுவனம் தனது மேக்கிண்டோஷ் கணினிகளில் தமிழைப் பயன்படுத்த வழியேற்படுத்தித் தந்தது என தமிழோசையில் கருத்து வெளியிட்ட உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தினுடைய இந்தியக் கிளையின் தலைவர் மணி மணிவண்ணன் தெரிவித்தார்.

தாய்லாந்து, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளும்கூட தமது நாடுகளில் விற்கப்படும் கருவிகளில் தமது மொழிக்கான வசதி இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதால் அம்மொழி பேசும் மக்களுக்கு நவீன கருவிகளில் தமது தாய்மொழியைப் புழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என மணிவண்ணன் குறிப்பிட்டார்.

நவீன கருவிகளிலும் மென்பொருட்களிலும் தமிழைப் பயன்படுத்தும் வசதியை செய்துகொடுப்பதில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லை என்றும், ஆனால் அவ்வாறான கோரிக்கைகளும் சட்டங்களும் இல்லை என்பதாலேயே கருவி உற்பத்தி நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.