BBC navigation

யுக்ரெய்னில் தொடரும் பிரச்சினைகள் - காணொளி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2014 - 14:44 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

யுக்ரெய்னின் புதிய அரசாங்கத்தின் பிரச்சினைகள் தொடருகின்றன. யனுகோவிச் ரஷ்யாவில் இருக்கிறார். இவை குறித்த காணொளி.

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

யுக்ரெய்னின் புதிய அரசாங்கத்தின் பிரச்சினைகள் தொடருகின்றன.

சிம்ப்பெரோபோல் விமான நிலையத்துக்குள் அதிரடியாக அடையாளம் தெரியாத சுமார் 50 ஆயுததாரிகள் நுழைந்துள்ளதாக கிரிமியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அந்த விமான நிலையம் வழமைபோன்று செயற்படுவதாகவும், பல ஆயுதபாணிகள் அங்கு ரோந்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது வரும் செய்திகள் கூறுகின்றன.

யுக்ரெனிய நிகழ்வுகள் குறித்து முதல் தடவையாகக் கருத்துக் கூறியிருக்கும் ரஷ்ய அதிபர் பூட்டின் அவர்கள், யுக்ரெய்னுக்கான பொருளாதார மீட்புத் திட்டத்தில் மேற்குலகுடன் ஒத்துழைக்குமாறு ரஷ்ய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அதேவேளை, பொருளாதார பிரச்சினைகளை கையாள உதவி கோரும் உக்ரெய்னில் உள்ள புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் துணை அதிபரான ஜோ பைடன் தனது நாட்டின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த காணொளி.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.