ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யுக்ரைனில் முற்றும் நெருக்கடி - காணொளி

27 பிப்ரவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:19 ஜிஎம்டி

யுக்ரெய்னின் க்ரைமீயா பகுதியில் உள்ள கடற்படைத் தளத்தின் வெளியே ரஷ்ய துருப்புகளின் நடமாட்டம் எதுவும் தென்பட்டால் இனி அதனை ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக கருதப்போவதாக யுக்ரெய்னின் இடைக்கால அதிபர் எச்சரித்துள்ளார்.

யுக்ரெய்னின் தென்பிராந்தியத்துடைய தலைநகரமான சிம்ஃபெரோபோலில் சட்டமன்றத்தையும் நிர்வாகக் கட்டிடங்களையும் ஆயுததாரிகள் முற்றுகையிட்ட பின்னர் தற்காலிக அதிபராகியுள்ள ஒலெக்ஸாந்தர் துர்ச்சிநோவ்வின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

இரவுப் பொழுதில் சுமார் முப்பது பேர் அதிரடியாக வந்து காவலர்களை அடித்துப்போட்டுவிட்டு கட்டிடங்களை முற்றுகையிட்டதாக சாட்சிகள் இண்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இக்கட்டிடங்களின் மேலே ரஷ்யக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பகுதிகளை பொலிசார் தற்போது சுற்றிவளைத்துள்ளனர்.

யுக்ரெனுடனான தனது எல்லையை ஒட்டி நிலைகொண்டுள்ள ஒன்றரை லட்சம் படையினரை கடந்த புதனன்று ரஷ்யா அதிக உஷார் நிலையில் வைத்திருந்தது.

யுக்ரெய்னில் ரஷ்யா இராணுவ ரீதியாக தலையிடுவதென்பது மோசமான தவறு என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருந்தார்.

யுக்ரெய்னுக்கு 100 கோடி டாலர்கள் கடன் உத்திரவாதம் வழங்குவது பற்றி அமெரிக்கா பரிசீலித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை குறித்த காணோளி.