BBC navigation

ஜேவிபியின் தலைமை மாற்றமும்- எழும் கேள்விகளும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 பிப்ரவரி, 2014 - 17:11 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையில் ஜேவிபி கட்சியின் புதிய தலைமை மாற்றம் பற்றி அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரனிடம் தமிழோசை எழுப்பிய கேள்விகளும் அவரது பதில்களும்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஸ்தாபகர் ரோஹண விஜயவீரவுக்குப் பின்னர் நீண்டகாலம் ஜேவிபி தலைவராக இருந்த சோமவன்சவிடமிருந்து அனுர குமார தலைமையை ஏற்றார்

மக்கள் விடுதலை முன்னணி மகிந்த ராஜபக்ஷவின் முதலாவது அரசாங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

அதன்பின்னர் மகிந்த அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியான ஜேவிபி, ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது.

அக்கட்சி அண்மைய ஆண்டுகளில் பல பிளவுகளைச் சந்தித்தது. முக்கிய செயற்பாட்டுக் குழுவொன்று அக்கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஒன்றும் உருவானது.

அண்மைய ஆண்டுகளாக தொடர் அரசியல் தோல்விகளைச் சந்தித்துவரும் ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைமை மாற்றம் குறித்தும், சிறுபான்மை சமூகத்திடமிருந்து அந்நியப்பட்டுள்ள அக்கட்சியால் தேசியக் கட்சியாக இயங்கமுடியுமா என்பது பற்றியும் தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் அளித்த பதில்கள்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.