BBC navigation

ரவீந்திரனை பாலியல் இச்சைக்காக பலியாக்கிவிட்டனர்: தாய் கதறல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 ஜனவரி, 2014 - 17:12 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

ஒருபால் உறவுக்கு வற்புறுத்தியவர்களுக்கு எதிர்ப்புக் காட்டியபடியாலேயே தனது மகன் இறுதியில் மரண தண்டனைக்கு உள்ளானதாக ரவீந்திரனின் தாய் கூறுகிறார்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கிருஷ்ணபிள்ளை ரவீந்திரனின் தாய்

ஐக்கிய அரபு ராஜ்யத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரவீந்திரனின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் துணை முகாமையாளர் மங்கள ரந்தெனிய கூறுகின்றார்.

அந்நாட்டு பிரஜை ஒருவரை வாகனத்தினால் மோதிக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, மட்டக்களப்பு கொம்மாதுறை வாசியான கிருஷ்ணபிள்ளை ரவிந்திரன் என்ற இளைஞருக்கு கடந்த செவ்வாய்க் கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை கொல்லப்பட்டதாக கூறப்படும் நபர் தனது மகனுக்கு ஒருபால் உறவுக்கு வரும்படி நெருக்கடி கொடுப்பது பற்றி ஏற்கனவே மகன் தன்னிடம் கூறியிருந்தாக கிருஷ்ணபிள்ளை ரவிந்திரனின் தாயாரான நாகரத்தினம் கூறுகின்றார்.

மரண தண்டனைக்கான திகதி தீர்மானிக்கப்பட்ட பின்பு மகனை பார்வையிடவென அந்நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட தன்னிடம் சடலத்தை தர முடியாது என்றும் கையொப்பத்தை வைத்து விட்டு போகுமாறும் அதிகாரிகள் கோரிய போதிலும் தான் அதற்கு இணங்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.