BBC navigation

இந்தியாவில் மேலும் ஒரு ரெயில் விபத்தில் 9 பேர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 ஜனவரி, 2014 - 10:45 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரு ரெயில் வண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில்,ஒரு பெண் உட்பட குறைந்தது 9 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரு ரெயில் வண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில்,ஒரு பெண் உட்பட குறைந்தது 9 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் சென்று கொண்டிருந்த டெராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குறைந்தது மூன்று பெட்டிகளிலாவது தீப்பிடித்தது.

இந்திய நேரப்படி விடியற்காலை 2.30 மணி அளவில் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த பெட்டியுடன் இணைக்கப்பட்ட வேறு இரண்டு பெட்டிகளிலும் தீ உடனடியாக பரவியது.

தீயிற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

மும்பையிலிருந்து டெஹராடூனிற்கு சென்று கொண்டிருந்த இந்த ரயிலில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள தஹானு என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.

ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பெரும்பாலான பயணிகள் வெளியேற்றப்பட்டதாக, மேற்கு ரயில் சேவையின் செய்தி தொடர்பாளர் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்துக்கான காரணத்தை ஊகிக்க முடியவில்லை என்றும், நேரில் கண்ட சாட்சி ஒருவர் ரயிலில் ஒரு பெட்டியிலிருந்து தீப்பிடித்தது என்று கூறினாலும், இது குறித்த தகவல்கள் ஆராயப்படும் என்றார் அவர்.

அந்தப் பாதையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டதாகவும், வெளியேற்றப்பட்டவர்கள் ரயிலின் மற்ற பெட்டிகளில் ஏறி அவர்களது பயணத்தை தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ரயில் ஒன்று தீப்பிடித்ததில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 26 பேர் வரை இறந்தனர். கடந்த வருடம் ஆந்திரத்தில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் வரை இறந்தனர். இந்த இரண்டு விபத்துக்களிலும் மின்சார சுற்றமைப்பில் ஏற்பட்ட கோளாறால் தீப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 மில்லியன் பயணிகளை ஏந்திச் செல்லும் சுமார் 9000 பயணிகள் ரயில்களை கொண்ட இந்திய அரசுக்கு சொந்தமான ரயில் சேவைகளில் விபத்துகள் நடப்பது சகஜமானதாகும்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.