BBC navigation

"வருமான வரியை ஒழிப்பது முட்டாள்தனமானது"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஜனவரி, 2014 - 17:27 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

வருமான வரி உள்ளிட்ட பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஒழித்துவிட்டு புதிய வரியை கொண்டுவரலாம் என்ற யோசனை தவறு என்கிறார் முன்னாள் வருவாய்த்துறைச் செயலாளர் எம் ஆர் சீனிவாசன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்திய ரூபாய்

இந்திய ரூபாய்

வருமான வரியை ரத்து செய்வதால் கேடுதான் ஏற்படும் என்று இந்திய அரசின் ஒய்வு பெற்ற வருவாய்த் துறைச் செயலர் எம் ஆர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை விலக்கிவிட்டு பொருட்களை வாங்கும்போது மட்டும் செலுத்தக் கூடிய பரிவர்த்தனை வரியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சியின் சில தலைவர்களும் அவர்களுடன் நெருங்கி செயல்படுவோரும் முன்வைக்கின்றனர்.

பொருட்களை வாங்கல் விற்றல் செயற்பாடுகளின்போது பரிவர்த்தனை வரி விதிக்கும் நடைமுறையைக் கொண்டுவந்தால், பலர் பொருட்களின் விலையை குறைத்து மதிப்பிட்டோ அல்லது வரி விதிப்பில் இருந்து தப்ப பணத்தைக் கொடுத்து வாங்கவோ முயல்வார்கள், எனவே இந்தப் புதிய வரியால் வரிவருமானம் கூடாது என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.