ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய கற்சூளைகள் தரும் ''இரத்தக் கற்கள்''

4 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:49 ஜிஎம்டி

இந்தியாவின் செங்கற்சூளை தொழிற்துறையில் நிலவும் மனித அவலத்தை ஒழிக்க நிறையச் செய்ய வேண்டியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் எழுச்சி கண்டுவருகின்ற நிர்மாணத்துறைக்கு கற்களை விநியோகிக்கின்ற இந்த தொழிற்துறையை பிரிட்டன் மற்றும் ஏனைய பல்தேசியக் கம்பனிகளும் பயன்படுத்துகின்றன.

வேகமாக வளருகின்ற இந்தியப் பொருளாதாரத்தின் மிகவும் முக்கிய பகுதியாகவும் இந்தத் தொழிற்துறை திகழ்கிறது. இந்தியாவில் கற்சூளைகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

பல சூளைகள் கொத்தடிமைத் தொழிலாளர்களை, கிட்டத்தட்ட அடிமைகள் போல பயன்படுத்துகின்றன. தினமும் 12 மணித்தியாலங்கள் பணியாற்றும் இவர்களது ஒரு நாள் கூலி தோராயமாக 150 இந்திய ரூபாய்கள் மாத்திரமே.

கடுமையான வேலைநிலைமை மற்றும் சூளையின் புகை காரணமாக பலர் சுகவீனமுற்று இருக்கிறார்கள். இதனால் இவர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற கற்களை செயற்பாட்டாளர்கள் ''இரத்தக் கற்கள் '' என்று வர்ணிக்கிறார்கள்.

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இருந்து பிபிசியின் ஹம்ப்ரே ஹௌக்ஸ்லே அவர்கள் வழங்கும் காணொளி.