நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (1.9 எம்பி)

சிவாஜி சிலை விவகாரம்: "அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை"

26 நவம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:43 ஜிஎம்டி

சென்னை காமராஜர் சாலையிலுள்ள சிவாஜி கணேசனின் சிலையை வேறு இடத்துக்கு மாற்ற அரசு உத்தேசித்துள்ளதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் காந்தி கூறுகிறார்.

போக்குவரத்துக்கு இடையூராக சிலைகளையோ, அல்லது வேறு நிரந்தர அமைப்புக்களையோ ஏற்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணாக இந்த சிலை நிறுவப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காந்தி தமிழோசையிடம் கூறினார்.

உலகின் பல இடங்களில் சிலைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், இந்த சிலையை காமராஜர் சிலைக்கு அருகே வைக்கலாம் என்றார்.

சிலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தொடரப்பட்டுள்ள வழக்கில் சட்டமும், காவல்துறையின் அறிக்கையும் தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.