BBC navigation

'பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 1000 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 நவம்பர், 2013 - 15:09 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

பிலிப்பன்ஸை தாக்கிய தைப்பூன் ஹையான் என்னும் பெரும் சூறாவளியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. அது குறித்து அங்கு வாழும் ஒருவரின் செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பிலிப்பன்ஸை தாக்கிய தைப்பூன் ஹையான் என்னும் பெரும் சூறாவளியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

லெய்தே என்னும் தீவின் தக்லோபான் என்னும் நகர் இந்த சூறாவளியில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மாத்திரம் நூறுபேர் வரை இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இதில் இறந்திருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.

சமர் மாகாணத்திலும் 200 பேர் வரை இறந்ததாகக் கூறப்படுகிண்றது.

இதற்கிடையே அரசாங்க அமைச்சர் ஒருவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தின் மூலம் சென்று பார்த்திருக்கிறார்.

இராணுவமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்காக செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வீதிகள் உடைந்தும் நீரில் மூழ்கியும் இருப்பதால், பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைவது மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சூறாவளியின் பாதிப்பு குறித்து பிலிப்பைன்ஸில் வாழும் தமிழரான புஸ்பாகரன் அவர்கள் பிபிசிக்கு வழங்கிய தகவல்களை இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.