ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கென்யத் தாக்குதல் - மறைந்து தப்பிய மக்கள்

25 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:04 ஜிஎம்டி

நைரோபியின் வர்த்தக வளாகத்தில் நான்கு நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் முடிவுக்கு வந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்கள் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கென்ய அரசு அறிவித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகள் உட்பட மொத்தம் 67 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடைபெற்ற சமயம் அந்த வளாகத்தில் இருந்தவர்கள், தரையோடு தரையாக படுத்துக் கொண்டு, பல மணிநேரம் அசையாமல், பேசாமல் இருந்துள்ளனர். சமயம் பார்த்து அவர்களில் பலர் தப்பியுள்ளனர்.