ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தோனேசிய தடை முகாம்களில் வாடும் அகதிகள் - காணொளி

4 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:35 ஜிஎம்டி

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள், இலங்கை, ஆப்கானிஸ்தான், இரான், இராக் போன்ற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான டாலர்களைக் கொடுத்து படகுகளில் செல்லும் இவர்கள் எல்லாருமே தமது பயணத்தை தாம் விரும்புவது போல பூர்த்தி செய்ய முடிவதில்லை.

கடலில் ஏற்படும் விபத்துக்களாலும், வேறு காரணங்களாலும் இவர்கள் இந்தோனேசியாவில் தடைப்பட நேர்கிறது.

அங்கு இந்தோனேசிய தடை முகாம்களில் மாட்டிக்கொள்ளும் இவர்கள் பல வருடங்களை அங்கு கழிக்க நேர்கிறது.

அவர்களது அவலம் குறித்த காணொளிப் பெட்டகம் இது.