BBC navigation

'நவி பிள்ளையை சந்தித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 செப்டம்பர், 2013 - 18:41 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையரை சந்தித்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது என இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையை சந்தித்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது என இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.

இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்ட தினத்தன்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த நவி பிள்ளை, தன்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

லண்டனில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸிடம் பிபிசி இதுபற்றி கேள்வி எழுப்பியது.

நவி பிள்ளை தனது முறைப்பாடுகளை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக முன்வைக்காவிட்டாலும், அவ்வாறு யாரும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்களா என்று விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜீ.எல். பீரிஸ் கூறினார்.

இலங்கை தொடர்பில் நவி பிள்ளை கொழும்பில் வெளிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை என்றும் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாக நவி பிள்ளை கூறியுள்ளமை அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் அமைச்சர் கூறினார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.