ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஃபோண்டெர்ராவுக்கு எதிராக இலங்கையில் போராட்டம்

22 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 12:35 ஜிஎம்டி

இந்த வீடியோவில் ஒலி வர்ணனை இல்லை.

உலகின் மிகப்பெரும் பாலபொருட்கள் ஏற்றுமதியாளரான நியுஸிலாந்தின் ஃபோண்டெர்ரா நிறுவனம், இலங்கை நீதிமன்ற தடை ஆணையை மீறி தொடர்ந்து தனது பொருட்களை விற்பனை செய்வதைக் கண்டித்து இலங்கையில் ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஃபோண்டெர்ரா உட்பட சில இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களில் டி சி டி என்று சொல்லப்படுகின்ற டைசியண்டியமைட் இரசாயனக் கலப்படம் இருக்கிறது என இலங்கையின் தொழிற்சாலைத் தொழில்நுட்பக் கழகத்தினர் நடத்திய பரிசோதனைகளில் தெரியவந்ததாக இலங்கையின் சுகாதார அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது இதையடுத்து பால் உற்பத்திப் பொருட்கள் அனைத்துக்கும் இரண்டு வார காலத்துக்கு விற்பனை, விநியோக விளம்பரத் தடைவிதிப்பதாக இலங்கையிலுள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

தேசிய சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் தொடுத்திருந்த மனு ஒன்றில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.

சீதுவ நகரில் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.