நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5 எம்பி)

மலையகத்தின் அரசியல் சக்தி சிதறிவிட்டதா? : கட்சி மாறிய ராஜதுரை பதில்

19 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 19:02 ஜிஎம்டி

மத்தியில் அரசாங்கத்தின் கூட்டணியாகவுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமானும் முத்து சிவலிங்கமும் மட்டுமே நாடாளுமன்றத்தில் இப்போது எஞ்சியுள்ளனர்.

கடந்த காலங்களில் அக்கட்சியிலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், வெவ்வேறு கட்சிகளுடன் இணைந்துகொண்டுள்ளனர். பல மலையகக் கட்சிகள் அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்திருந்தாலும் வெவ்வேறு முகாம்களாகவே இயங்குகின்றன.

பல மாவட்டங்களில் மலையக மக்களுக்கு இருந்துவந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் கட்சித்தாவல்கள் காரணமாகவும் புதிய கட்சிகள் காரணமாகவும் இன்று காணாமல்போயுள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று வெளியேறியுள்ள ராஜதுரை எம்.பியுடன் ஒரு நேர்காணல்