BBC navigation

"ஆங்கிலம் இந்திய கலாச்சாரத்தை அழிக்கிறதா?"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 ஜூலை, 2013 - 17:53 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

ஆங்கில மொழி இந்திய கலாச்சாரத்தை அழிப்பதாகவும், அதன் விளைவுகளில் ஒன்றாக சமஸ்கிரதம் இந்தியாவில் செல்வாக்கிழந்துவிட்டதாகவும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறிய கருத்துக்கள் பிழையாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக கூறுகிறார் பாஜக சார்பில் பேசவல்ல நிர்மலா சீதாராமன்

ஆங்கில மொழி என்பது இந்திய கலாச்சாரத்தை அழிப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக சமஸ்கிரதம் படிப்படியாக செல்வாக்கிழந்துவிட்டதாகவும் இன்றைய நிலையில் வெறும் 14 ஆயிரம் பேர் மட்டுமே இந்தியாவில் சமஸ்கிரதம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அரசியலில் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.

பாஜகவின் கொள்கை விளக்கக் குறிப்புக்களை தயாரிக்கும் பொறுப்பை ஆங்கிலம் மட்டுமே பேசத்தெரிந்தவர்களிடம் கையளித்திருக்கும் பாஜகவின் தலைவர், ஆங்கிலத்தால் இந்திய கலாச்சாரம் காணாமல் போவதாக கூறுவது அவரது இரட்டை அளவுகோலை காட்டுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.

ஆனால் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறிய கருத்துக்கள் அவர் சொன்னதற்கு மாறாக பிழையாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக கூறுகிறார் பாஜக சார்பில் பேசவல்ல நிர்மலா சீதாராமன்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.