BBC navigation

உரப் பற்றாக்குறை சிக்கலில் இலங்கை விவசாயிகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஜூன், 2013 - 17:25 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கை உர உற்பத்தியில் தன்னிறைவு அடையாமல், இறக்குமதிகளை மட்டுமே நம்பியுள்ள நிலையில், விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

உரமில்லை, உற்பத்தி பாதிப்பு, கவலையில் இலங்கை விவசாயிகள்

இலங்கை உர உற்பத்தியில் தன்னிறைவு அடையாத காரணத்தால், இறக்குமதிகளை மட்டுமே நம்பியுள்ள நிலையில், விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் பல்தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் காரணமாக விவசாயிகள் தமது உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் அரசோ தன்னால் முடிந்ததை செய்கிறது என்கிறது.

உள்நாட்டில் உர உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் இருந்தாலும், இன்னும் தேவைக்கேற்ற வகையில் உர உற்பத்தியை செய்ய இலங்கை முன்வரவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார் கொழும்பு பல்கலைகழத்தின் பொருளாதாரத்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி.

அதே போல விவசாயிகளிடம் உரத்தை எந்த அளவில் பயன்படுத்துவது என்பது குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் அவர் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.