BBC navigation

'கிரிக்கெட் போராட்டம் நியாயமா?' - ஒரு விவாதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஜூன், 2013 - 15:06 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

பிரிட்டனில் நடந்த இலங்கை கிரிக்கெட் ஆட்டங்களின் போது இலங்கை அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தேவையா என்பது குறித்த விவாதம்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பிரிட்டனில் நடந்த இலங்கை ஆடிய கிரிக்கெட் ஆட்டங்களின் போது இலங்கை அரசுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

இங்கு இலங்கை அணி ஆடிய அனைத்து ஆட்டங்களின்போதும் மைதானங்களுக்கு வெளியே தமிழர் அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அதேவேளை இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், கார்டிஃப் நகரில், இந்திய அணிக்கு எதிராக இலங்கை ஆடிய போது மைதானத்துக்குள்ளும் சில இளைஞர்கள் நுழைந்து தமது எதிர்ப்பை காண்பித்தார்கள்.

இவை குறித்து எமது நேயர்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. எமது ஃபேஸ்புக் பக்கத்திலும், மின்னஞ்சல் மூலமும் இந்தக் கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்தப் போராட்டங்கள் நியாயமானவையா, அவை விளையாட்டு மைதானங்களில் செய்யப்படலாமா என்பவை குறித்து எமது இரு நேயர்களான பிரிட்டனில் வசிக்கும் சஞ்சை மற்றும் இலங்கையில் இருந்து இங்கு வந்து இந்த ஆட்டங்களைப் பார்த்த சாந்தறூபி ஆகியோர் விவாதிக்கின்றனர்.

வழங்குகிறார் சீவகன்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.