நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5 எம்பி)

1983 முதல் 2009 வரை: வடக்கு வாக்காளர் பட்டியல் மாறுகிறது!

11 மே 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:51 ஜிஎம்டி

இலங்கையில் 1983-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் வடக்கு பிரதேசங்களிலிருந்து வெளியேறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களை வடமாகாண வாக்காளர் பெயர் பட்டியலில் பதிவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சரவை அங்கீகரித்துள்ள இந்தத் திட்டத்திற்காக அவசர சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் போவதாக நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த அவசர சட்டத்தின் நோக்கம் மற்றும் பின்னணி பற்றி ரவூப் ஹக்கீம் தமிழோசைக்கு அளித்த விளக்கத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.