BBC navigation

அரசுக்கு எதிரான பேச்சுக்கு தேசத் துரோக வழக்கு- இது மலேசியாவில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 மே, 2013 - 17:48 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

மலேசியாவில் நாடாளுமன்றத் தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றதாக கூறியுள்ள எதிர்கட்சியினர் மீது தேசத் துரோக வழக்கு பதிவாகியுள்ளது.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

மலேசியாவில் புதிய அரசை அங்கீகரிக்கவில்லை என்று கூறும் எதிர்க்கட்சியினர், பல தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு கோரியுள்ள நிலையில், அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம்

இதை பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான கூட்டணியில் உள்ள மக்கள் நீதிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேந்திரன்.

மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் என் சுரேந்திரன்

கடந்த வாரம் மலேசியாவில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினாலும், நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி 133 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது.

இதையடுத்து நாட்டின் பிரதமராக நஜீப் ரசாக் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பெருமளவில் மோசடிகள் நடைபெற்றதாகக் கூறும் மக்கள் கூட்டணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதன்கிழமை சிலாங்கூரில் நடத்திய ஒரு பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் மீது மலேசிய அரசு தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது.

இது குறித்து அக்கூட்டத்தில் பேசியவர்களில் ஒருவரான மக்கள் நீதிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.