BBC navigation

சாதாரண வன்முறைகளும் இனவாதமா?: ஞானசார தேரர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 மார்ச், 2013 - 17:05 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

நாட்டில் நடக்கும் சாதாரண வன்முறைகளுக்கு சர்வதேச ஊடகங்களும் தேசத் துரோகிகளும் இனவாத சாயம் பூசுவதாக பொது பல சேனாவின் ஞானசார தேரர் கூறுகிறார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவையில் முஸ்லிம் உரிமையாளர்களுக்குச் சொந்தமான துணிக்கடை தாக்கப்பட்டச் சம்பவம் பற்றி பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், அந்த தாக்குதல் சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.

சர்வதேச ஊடகங்களும் தேசத்துரோக சக்திகளுமே தமது அமைப்பின் மீது சேறு பூசுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, நாட்டில் மக்கள் தமக்கிடையில் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவங்களுக்கு இனவாத சாயம் பூச சிலர் முற்படுவதாகவும் அவர் வாதிட்டார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.