BBC navigation

'இலங்கை அரசியலில் பெண்கள் பங்களிப்பு போதாது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 மார்ச், 2013 - 16:25 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையில் பெண்கள் அரசியலில் போதுமான பங்களிப்பை செய்வதற்கான சூழ்நிலை இன்னமும் பலவீனமாகவே இருப்பதாக இலங்கை எழுத்தாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான காயத்திரி நளினகாந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெண்கள் அரசியலில் போதுமான பங்களிப்பை செய்வதற்கான சூழ்நிலை இன்னமும் பலவீனமாகவே இருப்பதாக இலங்கை எழுத்தாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான காயத்திரி நளினகாந்தன் தெரிவித்துள்ளார்.

உலக மகளிர் தினம் அனுட்டிக்கப்படும் நிலையில் இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது என்று பிபிசியால் கேட்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையிலேயே காயத்திரி இவ்வாறு கூறினார்.

உலகுக்கு முதலாவது பெண் பிரதமரைத் தந்த நாடாக இலங்கை இருந்த போதிலும் அங்கு இன்னமும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது கணிசமாக இல்லை.

அரசியல் கட்டமைப்பு என்பது இலங்கையில் இன்னமும் ஆணாதிக்கத்தால் சூழப்பட்ட ஒன்றாக இருப்பதும், இலங்கை குடும்பங்கள் இன்னமும் பெண்களை வீட்டை நிர்வகிப்பதற்கான ஒருவராக மாத்திரமே வளர்க்க முனைவதும், கடந்த 30 வருடகாலப் போரும் பெண்கள் அரசியலுக்கு வருவதற்கான கணிசமான சூழலை அங்கு ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.