BBC navigation

'இலங்கையில் பல்கலை. அனுமதியும் சிறுபான்மை சமூகங்களும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 பிப்ரவரி, 2013 - 17:28 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

மூத்த கல்வியலாளரும் கொழும்புப் பல்கலைக்கழக கல்விப் பீடத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தமிழோசைக்கு அளித்த செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையின் கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென்று பல்கலைக்கழக சமூகம் 100 நாட்களாக போராட்டம் நடத்தியது.

இலங்கையின் கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென்று பல்கலைக்கழக சமூகம் 100 நாட்களாக போராட்டம் நடத்தியது.

இலங்கையில் தற்போது தேசிய மட்டத்திலான திறமை அடிப்படையிலும் மாவட்ட ஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.

1970களின் ஆரம்பத்தில் பல்கலைக்கழக அனுமதியில் அரசு கொண்டுவந்த 'தரப்படுத்தல்' நடைமுறை தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைய காரணமானது என்ற வாதம் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றது.

மாணவர்கள் திறமை அடிப்படையில் உள்வாங்கப்படாமல் மாவட்ட ஒதுக்கீடு அடிப்படையில் உள்வாங்கப்பட்டபோது பெருமளவிலான தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்க நேரிட்டமை குறித்து பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

அக்காலத்தில் தமிழர் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பும் அதற்கு கிளம்பியது.

ஆனால் 1978-இன் பின்னர் வந்த அனுமதி நடைமுறை, கல்வியில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு காரணமாகியுள்ளது.

பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன்

பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன்

இந்த நிலைமையில், இலங்கையில் தற்போதுள்ள நடைமுறை குறித்து தமிழ், முஸ்லிம் தரப்பினரிடமிருந்து பெரியளவில் முறைப்பாடுகள் வெளிவரவில்லை என்றே கல்வியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் தேசிய மட்டத்தில் திறமையுள்ள மாணவர்கள் பலர் தற்போதுள்ள நடைமுறையால் பல்கலைக்கழக வாய்ப்பை இழப்பதாக கடந்த சில ஆண்டுகளாக பெரும்பான்மை சமூகத்திலிருந்தே முறைப்பாடுகள் வெளிப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமையில், பல்கலைக்கழக அனுமதியில் மாற்றம் கொண்டுவருவதற்கு நாட்டின் உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக கல்வித்துறைசார் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

1993-ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படியே பல்கலைக்கழகங்களுக்கு மாவட்ட ரீதியாக மாணவர்கள் உள்வாங்கப்படுவதாகவும் இலங்கையின் வடக்கு மாவட்டங்களில் தற்போது சனத்தொகை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் நாட்டின் உயர்கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமையில் மூத்த கல்வியலாளரும் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்வித்துறையின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசியரியர் சோ. சந்திரசேகரன் அவர்களிடம் தமிழோசை கருத்து கேட்டது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.