BBC navigation

'பல்கலைக்கழக அனுமதி வயதைக் குறைப்பது நல்லதே'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 ஜனவரி, 2013 - 16:17 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையில் பள்ளிக் கல்விக்கான ஆண்டுகளை குறைப்பதில் சில பாதகங்கள் இருந்தாலும், பல்கலைக்கழ அனுமதிக்கான வயதைக் குறைப்பது வரவேற்கத்தக்கதே என்று கல்வியியலாளரான பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கூறியுள்ளார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் பள்ளிக் கல்விக்கான ஆண்டுகளை குறைப்பதில் சில பாதகங்கள் இருந்தாலும், பல்கலைக்கழ அனுமதிக்கான வயதைக் குறைப்பது வரவேற்கத்தக்கதே என்று கல்வியியலாளரான பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இலங்கையில் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதி வயதை குறைப்பதற்கான ஒரு திட்டத்தை தாம் ஆராய்வதாக இலங்கை உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா கூறியிருந்தார்.

அதற்காக பள்ளிக்கூடங்களுக்கான அனுமதி வயதை குறைப்பது மற்றும் தற்போது அமலில் உள்ள 13 ஆண்டுகால பள்ளிக்கூடக் கல்வியை 12 ஆண்டுகளாக குறைப்பது ஆகியவை குறித்து தாம் ஆராய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய பல வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பல காரணங்களினால், பல்கலைக்கழக கல்வியை ஒருவர் முடிக்கும் காலம் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்ற கல்வியலாளர் சோ. சந்திரசேகரன் அவர்கள், அந்த நிலையில் இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வயதைக் குறைப்பதை வரவேற்கிறார்.

ஆனால், எப்படியிருந்தபோதிலும், 13 ஆண்டுகால பள்ளிக்கூடக் கல்வியை குறைப்பது சரியல்ல என்று அவர் வாதிடுகின்றார். ஆரம்பக் கல்வியை ஆரம்பிக்கும் வயதை குறைப்பதை அவர் வரவேற்கிறார்.

அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.