BBC navigation

'இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' : அழிந்துவரும் ஓர் அடையாளம்!

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஜனவரி, 2013 - 16:57 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையில் சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் ஆப்பிரிக்க இனத்தவர்கள் பற்றி ஒரு பார்வை

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.

எதிர்காலத்தை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் கஃபீர் இனச் சிறுவர்கள் சிலர்

காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை.

அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள்.

இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மக்கள் வாழ்கிறார்கள். எனினும் இவர்கள் எந்த அளவுக்கு இலங்கைச் சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்கிற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன.

அருகி வரும் இந்த மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்தும் ஆழ்ந்த கவலைகள் எழுந்துள்ளன.

இம்மக்கள் குறித்த சிறப்புப் பெட்டகத்தின் முதல் பகுதியை இங்கே கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.