BBC navigation

'அரசாங்கத்தின் செயற்பாடு மெத்தனமாக இருக்கிறது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 டிசம்பர், 2012 - 15:53 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

பெண்கள் மீதான வன்செயல்கள் குறித்து இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக இருப்பதாக பெண்ணியச் செயற்பாட்டாளரான வ. கீதா கூறியுள்ளார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பெண்கள் மீதான வன்செயல்கள் குறித்து இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக இருப்பதாக பெண்ணியச் செயற்பாட்டாளரான வ. கீதா கூறியுள்ளார்.

இப்படியான தருணங்களில் பாதுகாப்பு குறித்த அறிக்கைகளை இந்திய அரசாங்க நிறுவனங்கள் வெளியிடுகின்றனவே ஒழிய, இந்த விடயங்கள் குறித்து ஆழமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நகரங்களை நோக்கி பெண்கள் வேலைக்காக வருவது அதிகரித்திருக்கும் நிலையில், பொதுவெளியில் அவர்களது புழக்கம் அதிகரித்திருக்கிறது என்றும், ஆனால் டில்லி போன்ற பெரு நகரங்களில் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்றும் கீதா கூறுகிறார்.

''பெண்களுக்கு எதிரான் வன்செயல்கள் குறித்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டும், அவை கடுமையாக்கப்பட வேண்டும் என்பது உண்மையாயினும், அவற்றை அதிகாரத்தில் உள்ளவர்கள் தமக்கு தேவையான நேரங்களில் துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்ககூடாது'' என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரது முழுமையான செவ்வியை இங்கே கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.