திமுகவின் ஏற்பாட்டில் நடைபெறும் டெஸோ மாநாட்டின் பயன் குறித்து தமது கட்சிக்குள் முரண்பாடான கருத்துகள் என்கிறார் மனோ கணேசன்
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
தமிழகத்தில் திமுகவின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(12.8.12) நடைபெறவுள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டில் பங்குபெறுவதில்லை என்று இலங்கையின் ஜனநாயக மக்கள் முன்னணி முடிவெடுத்துள்ளது.
மிகவும் மன வருத்தத்துடனேயே இந்த முடிவை தமது கட்சி எடுத்துள்ளதாக அதன் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமிழக மற்றும் இந்திய அரசியல் கட்சிகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை விமர்சனம் செய்வதில்லை என்பதே தமது கட்சி தொடர்ந்து கடைபிடிக்கும் நிலைப்பாடாகும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
மேலும் திமுக மற்றும் அதன் தலைவர் மீது தாங்கள் உயர்ந்த கருத்துக்களை கொண்டுள்ளதாகவும் கூறும் மனோ கணேசன், எனினும் போர் நடைபெற்ற காலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுகவின் நடவடிக்கைகள் குறித்தும், போர் முடிந்த பிறகு நடைபெறும் இந்த மாநாட்டின் பயன்பாடு குறித்தும் தமது கட்சிக்குள் பெரும் முரண்பாடுகள் எழுந்துள்ளன எனவும் கூறுகிறார்.
இந்திய அரசு மற்றும் இலங்கையிலுள்ள சிங்கள கடும்போக்கு அமைப்புகளின் அழுத்தம் காரணமாகத்தான் தமது கட்சி திமுகவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டெஸோ மாநாட்டுக்கு போகாமல் இருப்பது என்று முடிவெடுத்துள்ளது என்று வெளியாகியுள்ள கருத்துக்கள் சரியல்ல என்றும் அப்படியான கருத்துக்களை தாங்கள் நிராகரிப்பதாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.
இந்திய அரசின் மீதும் தமது கட்சிக்கு விமர்சனம் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழகம் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து, இலங்கையின் மெய்யான பிரச்சினைகள் தொடர்பிலே ஒரு மாநாடு நடைபெற்று அதில் இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் பங்குபெற்றால் தமது கட்சியும் அப்படியான ஒரு மாநாட்டில் பங்குபெற தயங்காது எனவும் மனோ கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.