bbc.co.uk navigation

"விடுதலைப் புலிகள் குறித்து இந்தியா தவறாகக் கணித்தது"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 ஜூலை, 2012 - 18:55 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போது, விடுதலைப் புலிகள் குறித்து இந்தியா தவறாகக் கணித்தது என்று முன்னாள் இராணுவ அதிகாரி ஹரிஹரன் கூறுகிறார்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனாலும் அந்த ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற கேள்விகள் இன்றும் தொடருகின்றன.

எனினும் அந்த ஒப்பந்தம் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய ராஜந்திர தோல்வி என்றே விமர்சிக்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னெடுப்பில் உருவாகி, ராஜீவ் காந்தி-ஜெ ஆர் ஜெயவர்தன ஆகியோரிடையில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதை நடைமுறைபடுத்த எத்தரப்பும் முழுமையாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு இன்னும் உள்ளது.

இந்தியா விடுதலைப் புலிகளைசுலபமாக வழிக்கு கொண்டுவந்து விடமுடியும் எனக் கருதியது என்றும், அந்தக் கணிப்பீடு தவறாகச் சென்றதும், ஒப்பந்தம் செயலிழந்து போனதற்கு ஒரு முக்கிய காரணம் எனவும் ஹரிஹரன் கூறுகிறார்.

இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் புதுடில்லிக்கு சரியான கணிப்பீடுகளை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அவரது கருத்துக்களை இங்கே கேட்கலாம்

More Multimedia

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.