bbc.co.uk navigation

சென்னை கொழும்பு அணிகளுக்கு இடையே படகுப் போட்டி-75 ஆண்டுகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜூலை, 2012 - 17:04 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

சென்னை மற்றும் கொழும்பு படகு அணிகளுக்கு 75 ஆவது வருடாந்திரப் போட்டி சென்னையில் முடிவடைந்துள்ளது. கொழும்பிலிருந்து

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சென்னை மற்றும் கொழும்பு படகுச் சங்கங்களுக்கு இடையேயான 75 ஆவது ஆண்டு படகுப் போட்டி அண்மையில் சென்னையில் முடிவடைந்துள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலாக இந்தப் போட்டிகள் இடம்பெற்றாலும், இடையே உலகப் போர்கள் மற்றும் இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக சில ஆண்டுகள் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு இலங்கையிலிருந்து 33 பேர் இந்த வருடாந்திரப் போட்டிகளில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தனர். இவ்வாண்டு மகளிர் பிரிவில் சென்னை அணியும், ஆடவர் பிரிவில் கொழும்பு அணியும் வெற்றி பெற்றுள்ளன.

அண்மைக் காலமாக தமிழகத்தில், இலங்கையிலிருந்து தமிழகம் வரும் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், இராணுவத்தினர் ஆகியோருக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இப்போட்டிகள் எவ்விதப் பிரச்சினையுமின்றி இடம்பெற்றுள்ளன.

எனினும் போட்டி குறித்து தாங்களுக்கு ஒரு சிறிய அச்சம் இருந்ததாக சென்னை படகு சங்கத்தின் காப்டன் ராஜேந்திரா தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.

More Multimedia

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.