கான்பூர் ஐஐடியின் இயக்குநர் மு. அனந்தகிருஷ்ணன் பேட்டி
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
இந்தியாவி்ல் தரம் வாய்ந்ததாகக் கருதப்படும் தொழிற்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி மற்றும் ஐஐஐடி ஆகியவற்றுக்கு அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், ஐஐடி நிர்வாகங்கள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அரசின் இந்த முடிவு, ஐஐடி நிறுவனங்களின் கல்வித் தரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என ஆட்சேபம் தெரிவித்தன.
இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணும் நோக்குடன், அரசு பிரதிநிதிகள் மற்றும் 16 ஐஐடி நிர்வாகங்களின் இயக்குநர்களைக் கொண்ட, உயர் அதிகாரம் கொண்ட ஐஐடி கவுன்சிலின் கூட்டம் இன்று புதன்கிழமை டெல்லியில் நடைபெற்றது.
அதில், மாநில தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பள்ளி இறுதித் தேர்வில் முதல் 20 சத இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குதல் உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், தலைவர் என்ற முறையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் பங்கேற்காத காரணத்தால், சென்னை ஐஐடியின் கவர்னர்கள் வாரியத் தலைவர் எம்.என். சர்மா தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கான்பூர் ஐஐடியின் இயக்குநர் மு. அனந்தகிருஷ்ணன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.
BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.