இலங்கையில் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள சூழலில், காட்டு யானைகளை பிடித்து பழக்குவது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் - ஒரு பெட்டகம்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
இலங்கையில் வளர்ப்பு யானைகள் மத ரீதியிலும் கலாச்சார ரீதியிலும் வேலைகளில் மனிதர்களுக்கு உதவுவது என்பதிலும் கணிசமான பங்காற்றுவதற்கு நெடியதொரு பாரம்பரியம் உள்ளது.
வளர்ப்பு யானைகள் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும் இந்த சின்ன நாட்டில் காட்டு யானைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
சென்ற வருடம் இந்தக் காட்டு யானைகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பை அரசாங்கம் நடத்தியிருந்தது. இந்தக் கணக்கெடுப்பை இயற்கைச் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் புறக்கணித்திருந்தன.
இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் காட்டு யானைகளைப் பிடித்துவந்து வளர்ப்பு யானைகளாக மாற்றுவதற்குரிய ரகசிய திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்கப பார்க்கலாம் என அவை அஞ்சின.
காட்டு யானைகளை பிடித்து வளர்ப்பு யானைகளாக்குவதற்கு 1970களில் இருந்தே தடை இருந்துவருகிறது.
ஆனாலும் இந்த சர்ச்சை இலங்கையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இலங்கை முகவர் சார்ல்ஸ் ஹவிலண்டின் பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

இலங்கையில் மத சடங்குகளில் யானைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன
BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.