BBC navigation

அணுமின்சாரம் இல்லாத ஜப்பான் - பெட்டகம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 மே, 2012 - 15:00 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

அணுமின்சாரம் இல்லாத ஜப்பான் தொடர்பில் டோக்கியோ முகவர் ரோலண்ட் பர்க் வழங்கும் பெட்டகத்தின் தமிழ் வடிவம்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

அணுமின்சாரம் வேண்டாம் என்று கோரி நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்று

அணுமின்சாரம் வேண்டாம் என்று கோரி நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்று

ஜப்பான் கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் தடவையாக அணுமின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறாமல் இயங்க ஆரம்பித்துள்ளது.

அந்நாட்டின் எரிசக்தித் தேவையில் கிட்டத்தட்ட முப்பது சதவீத மின்சாரத்தை வழங்கிவந்த அணுமின் நிலையங்கள் அனைத்தும் சென்றவாரக் கடைசியோடு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சென்ற வருடம் ஜப்பானை சீரழித்த சுனாமியும் நிலநடுக்கமும், ஃபுகுஷிமா அணுமின்நிலையத்தை சேதப்படுத்துவதற்கு முன்னால், அந்நாட்டில் மொத்தத்தில் 44 நாற்பத்து நான்கு அணு உலைகள் இயங்கிவந்துள்ளன.

அந்த நெருக்கடி ஏற்படுத்திய பயமும் கவலையும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பதால், நாட்டின் அனைத்து அணு உலைகளும் பழுதுபார்ப்பு பராமரிப்பு மற்றும் பரிசோதனைகளுக்காக இடைநிறுத்தப்பட்டன. இடைநிறுத்தப்பட்ட அணுமின் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுவதையும் மக்கள் எதிர்க்கின்றனர்.

அணுமின்சாரம் இல்லாத ஜப்பான் குறித்து எமது டோக்கியோ முகவர் ரோலண்ட் பர்க் வழங்கும் பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.